
NYSDA UK
காப்போம் கை கொடுப்போம்

2016
நாங்கள் நெடுங்கேணி, ஒத்தியமலை மற்றும் கைத்தடி பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க நிதி திரட்டி, அவர்கள் கல்வியை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கற்றல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல், யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ளவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி, அவர்கள் கல்வி மற்றும் அன்றாட தேவைகளுக்கான போக்குவரத்தை எளிதாக்கியுள்ளோம். கனுக்கேணி பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு 2,50,000 ரூபாய் நிதி உதவி வழங்கி, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவியுள்ளோம்.
மேலும், மன்னார் மற்றும் தட்சணாமருதமடு பகுதிகளைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு தேவாலய மண்டபத்தில் தங்குமிட வசதி ஏற்படுத்தி, அவர்களின் அடிப்படை மற்றும் கல்வி தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதோடு, யாழ்ப்பாணம், கைத்தடி, ஜெயவர்த்தனபுரம், கலினி மற்றும் பரத்தனை ஆகிய இடங்களில் கல்வி கற்றுவரும் 26 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி, அவர்கள் உயர்கல்வியை நிலைத்தன்மையுடன் தொடர உதவியுள்ளோம்.
*உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.