
NYSDA UK
காப்போம் கை கொடுப்போம்

2020
January
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் அந்தோனிக்கா கணவனை இழந்து யுத்தத்தில் காணாமற்போன மகள்குடும்பதில் மூன்று பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கான சுயதொழில் வாழ்வாதார உதவி. கச்சான் மற்றும் உலர்உணவு பண்டங்களை விற்பனை செய்வதற்கான நாற்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
Anthonica Arumugam, a widow with missing children during the civil war, requires aid to support her three grandchildren. A 3 wheeled trolley was provided in order for her to start her own business by selling snacks.


மாறாஇலுப்பை மற்றும் முள்ளியவளை பகுதிகளில் வாழும் இரண்டு மாணவர்களுடைய குடும்பங்களுக்கு கல்வி மேம்பாட்டுக்காக மாதாந்தம் ரூபா 5000 வழங்கப்படுகின்றது.
Two families in Marayilappai and Mulliavalai were finding it difficult to support their children's educational needs. Therefore, NYSDA UK donated 5,000 rupees each month since January 2020.
முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வ்வுனியா,மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான 38 சாதாரண (ரூபா 5000.00) மற்றும் 14 பல்கலைக்கழக மாணவர்களின் ( ரூபா10000.00) குடும்பங்களுக்கான மாதாந்த உதவிகள்.
10,000 rupees are being provided on a monthly basis to 38 families and 14 university students in Mullaithivu, Mannar, Kilinochchi, Vavuniya, Mattakalappu and Jaffna districts.

Due to restrictions of COVID-19, no charitable events took place from February to April.
May
கிளிநொச்சி மாவட்ட கல்வி பொதுத்தராதர சாதாரணம் 2019 ம் ஆண்டு 2242 மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறையால் தேற்றிய மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறு விபரங்கள்.
Below are the 2019 GCE O/L results of 2242 students, from 17 schools in Kilinochchi District, that NYSDA UK has been supporting:
Grade A - 297
Grade B - 188
Grade C - 499
Grade S - 439
Grade W - 819
One student obtained Grade A in the English medium.
These grades were achievable with the help of our contributors and specifically our volunteer, Lakshan Master.
திருக்கேதீஸ்வரம் பகுதியை சேர்ந்த மாவீரர் பெற்றாருக்கான வாழ்வாதார உதவி ரூபா 50000.00 வழங்கப்பட்டது. இத்துடன் மாதாந்தம் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு ரூபா 5000.00 வழங்கப்படுகின்றது.
Seemampillai Pushpaleela and their family have been struggling with basic needs.
NYSDA UK has helped this family by aiding this family with an advanced payment of 50,000 Sri Lankan rupees in order to help with their basic needs. Furthermore, monthly donations of 5,000 Sri Lankan rupees have been issued since May 2020. We would like to thank the main contributors that have been helping this family - the owner and staff members of Langstone Premier Store in Portsmouth.
June
நாவந்துறையை பகுதியைச் சேர்ந்த ராசப்பு அன்ரனி ரிச்சாட் குடும்பத்திற்கான மீன் விற்பனைக்கான சுயதொழில் வாழ்வாதார உதவி ரூபா 150000.00 வழங்கப்பட்டது. இவர்களின் சிறார்களின் எதிர்காலம் கருதி சில தகவல்கள் பகிரப்படவில்லை.
Anthony Richard lives with his family and faced extreme financial difficulties. With his low income, he was unable to fulfill his own and family's basic needs. One of his children has a dysfunctioning valve which requires constant repair [mentioned by Anthony Richard to NSYDA UK via telephone]. Mr. Richard owns an old van. He, therefore, requested 150,000 Sri Lankan rupees to have his van fixed in order to sell fish and provide for his family.
NYSDA UK has helped Mr. Richard by donating 150,000 rupees.


July
பூநகரி கறுக்காய்தீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் தவராணி குடும்பத்திற்கான பால் மாடு வளர்ப்பதற்கான சுயதொழில் வாழ்வாதார உதவி ரூபா 118000.00 வழங்கப்பட்டது.
Thavarani Jeyabalan lives with her son in Poonakari. She is struggling to provide for her son’s educational needs due to her low household income of 3000 rupees.
NYSDA UK has provided this family with a cow and calf, worth 118,000 rupees as a way for Thavarani to earn a living by selling milk.


August
பளை பிரதேசத்தை சூழவுள்ள மாணவர்களின் கற்கையை மேம்படுத்துவதற்காக 28 மாணவர்களுக்கான இதர நேர கற்கை வகுப்புக்கள். மாதாந்தம் 12 ஆசிரியர்களுக்கு ஊதியமாக ரூபா 50000.00 வழங்கப்படுகின்றது.
New Excellent Academy in Palai is a tutorial centre for 28 students, for which NYSDA UK has been providing a monthly contribution of 50,000 rupees to cover for the expenses.
சித்தன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த லவன் ஜெயந்தினி குடும்பத்திற்கான பால்மாடு வளர்ப்பதற்கான சுயதொழில் வாழ்வாதார உதவி ரூபா 124000.00 வழங்கப்பட்டது.
Jeyanthini Lavan requested NYSDA UK to provide her with a cow for her to make her own living to overcome her financial situation.
A cow worth 12,400 rupees was provided by NYSDA UK.


2020 ல் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள 7 பாடசாலைகளின் 117 மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வு. வளவாளர் மற்றும் மாணவர்களின் சிற்றூண்டி இதர செலவுகள் ரூபா 30000.00 வழங்கப்பட்டது.
45 students, living in Palai and Poonakari, are benefiting from free tuition. Free tutoring sessions are also being provided in Kilinochchi/Palai in order to prepare 117 students, from 7 different schools, for their Scholarship exams.
We would like to thank the tutor, Mr. J.J Bennett and our volunteer, Mr Lakshan for their contributions.



September
The second tutorial session took place to prepare students for their Scholarship exams.


Seminars 1, 2 and 3 for GCE O/L studies took place for students from Barathi Mahavithiyalam School.

வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் பிரதீபா குடும்பத்திற்கான தையல் சுயதொழில் வாழ்வாதார உதவி ரூபா 52000.00 வழங்கப்பட்டது. (தையல் இயந்திரம்) இவர்களின் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி நிழல்படங்கள் இதர விபரங்கள் தவிர்கப்பட்டுள்ளது.
A sewing machine worth 52,000 rupees was provided to Piratheepa Uthayakumar in Vasanthapuram.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 11 பாடசாலைகளில் க பொ த சாதாரண தர கற்கை மாணவர்களுக்கான 8 பயிற்சி செயலமர்வுகள். கிளிநொச்சி வலயக்கல்வி வளவாளர்கள் ஊதியம் மற்றும் மாணவர்களுக்கான சிற்றூண்டி செலவுகள் ரூபா 65000.00 வழங்கப்பட்டது.
In 11 schools in Kilinochchi district, 8 seminars were conducted for GCE O/L students. The donation included lectures, snacks and travel expenses.


October
பால் மாடு வளர்ப்பு: சத்தியபாமா செந்தமிழ்செல்வன், மாணிக்கபுரம் விசுவமடு (ஒரு கையை இழந்த முன்னாள் போராளிக்குடும்பம்), இரண்டு குழந்தைகள். இவர்களுக்கான வாழ்வாதார உதவி ரூபா 108000.00 வழங்கப்பட்டுள்ளது. கொறோனா தொற்று காரணமாக பணியாளர்கள் விசுவமடு பகுதிக்கு செல்லாத்தால் நிழற்பட ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை.
Sathiyapaama Senthamilchelvan, who lost an arm during the civil war, lives in Maanikapuram with 2 children. In order to support her raise her family, NYSDA UK has provided 108,000 rupees and a cow, as a way for her to earn money by selling milk.
November
தீவுப்பிட்டி நானாட்டான் பிரதேசத்தில் கணவனை இழந்த திருமதி தேவறஞ்சனி மகேந்திரன் அவர்களுக்கு பால் மாடு வளர்ப்பு வாழ்வாதார உதவி ரூபா 65000.00 வழங்கப்பட்டது.
Thevaranjani Mahendiran, a widow, has been given a cow and a total amount of 65,000 rupees to help afford basic necessities.


மாவடிச்சேனை வெருகல் பிரதேசத்தை சேர்ந்த திரு துரைநாயகம் ஜெயகாந்தன் அவர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான 200000.00 ரூபா பெறுமதியான படகு இயந்திரம் வழங்கப்பட்டது. (18 வயது மகன் வலுவிழந்தவர், இவர் சக்கரதாற்காலியில் வாழ்க்கை என்பது குறிப்பிடத்தக்கது).
Thurainayagam Jeyakanthan has been provided with a boat worth 200,000 rupees to help him progress in the marine industry. (He also mentioned how he is caring for his 18 year old son, who has a disability).



இலங்கைத்துறை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான திரு நல்லதம்பி (2 மாவீரரின் பெற்றார்) அவர்களுக்கு ஈருருளி திருத்தகம் நடாத்துவதற்கு 60000.00 வழங்கப்பட்டது.
A sum of Rs. 60,000 was provided to 71-year-old Mr. Nallathambi, a resident of Ilangathurai and parent of two மாவீரர் (Maveerar), to support the operation of his bicycle repair shop.



December
மன்னார் சாவற்கட்டு பிரதேசத்தை சேர்ந்த திருமதி வசந்தன் ராஜி என்பவருக்கான ரூபா 50000.00 பெறுமதியான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த உதவிவழங்கலுக்கு பங்களித்த திரு இளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
Raji Vasanthan, who lives in Mannar, has been provided with a sewing machine, worth 50,000 rupees. We would like to thank Mr Ilanko for his contribution.

